Wednesday, July 20, 2005

ஜெயேந்திரருக்கு இன்றும் அனுமதி மறுப்பு

ராமேஸ்வரம் கோவில் கருவறைக்குள் நுழைய ஜெயேந்திரருக்கு இன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயேந்திரர் கோபத்துடன் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்று விட்டார்.
ஆண்டுதோறும் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று ஜெயேந்திரர் ராமேஸ்வரம் சென்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதேபோல நேற்று காலை அவர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். பொதுவாக அவர் கோவிலுக்கு வரும்போது பூரண கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகம் வரவேற்பது வழக்கம்.
ஆனால் நேற்று ஜெயேந்திரர் அங்கு வந்தபோது அவரை வரவேற்க யாரும் இல்லை. பூரண கும்ப மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத ஜெயேந்திரர் தன்னுடன் வந்த பக்தர்களுடன் கோவிலுக்குள் சென்றார்.
ராமநாதசுவாமி சன்னதிக்கு வந்த அவர், கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி கும்பிட ¬முயன்றார். ஆனால் அவரை கோவிலின் இணை ஆணையர் சுப்பிரமணியம் தடுத்து நிறுத்தினார். கருவறைக்குள் ஜெயேந்திரர் நுழைய அனுமதி தர வேண்டாம் என தனக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

1 comments:

said...

கலிகாலத்துல பகவான் பக்தனை சோதிக்கறார். :-)