Friday, July 29, 2005
செக்கூலரிசம் - 8 வரி கவிதை
திருமா, கிருஷ்ணசாமி,வாண்டையார
சண்முகம், ராஜ கண்ணப்பன்
மருத்துவர், கலைஞர் அய்யா, மாயாவதி
ஜெ, உமா, அத்துவானி
சோனியா, ராகுல், பிரியங்கா
எல்லொரும் என் குடும்பத்துக்கு
இன்றைகான சாப்பாட்டுக்கு வழி
சொல்லிட்டு வாழ்க !! வாழ்க !!!
அடடா இது We didnt start the Fire மாதிரி எல்லார் பேரை போட்டு எழுதினா மாதிரி உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பு இல்லை.
கிண்டல் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கவிதையை (?!) எழுதவில்லை நான்... இதை படித்த பிறகாவது இணைய நண்பர்கள் என்னை சீரியஸாக எழுதுபவன் என்று அங்கீகரித்து, இனி வரும் என் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுப்பார்கள் என்ற நப்பாசைதான்...
Thursday, July 28, 2005
Tuesday னா ரெண்டு
வலை பூக்களில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் வெளிய வந்து கவலைபட மற்றொரு பதிவு .
எப்ப பார்த்தாலும் இந்த TVயில் ஒளிபரப்பாகும் " Tuesday னா ரெண்டு "என்ற விளம்பரத்தை பார்த்தா ஒரே டென்ஷ்ன் ஏறுது. இந்த சஸ்பென்ஸ் தேவையா ????
அநேகமாக அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை படம் எடுக்கும் எங்க தலைவர் இந்த Tuesday ரெண்டு பட அறிவிப்பு விட போறாரோ என்னவோ?
கேள்வி கூட பரவாயில்லை.. .அத சொல்றதுக்காக ஒளிபரப்பப்படும் காட்சிதான் கண்றாவியே.
இப்படியா ஒரு லாபம் பார்க்காம இந்த மாதிரி அறிவிப்பு விட்டு ஒரு விளம்பரத்தை ஒளிபரப்புவது?!
இதுக்கு 2X Tuesday ன்னு ஒரே அசிங்கமாய் பேரூ வேற..
நம்ப மாட்டேன்னு சொல்றீங்க இல்லை.
நீங்களே இந்த கன்றாவிய பார்த்துங்க !
நான் இந்த மாதிரி போட்டோ எல்லாம் இந்த பதிவில் போடறதாய் இல்லை !!!
(பின்ன என்னவாம்?? Pizza சாப்பிட்டா குண்டயிடுவேன்னு எல்லோரும் சொல்றாங்களே !!! இதில் இலவசமாய் வெற ஒன்னு கொடுத்தா? )
Wednesday, July 27, 2005
சிங்கபூர், சிகாகோ, சியாடல்
சீர்காழி சிதம்பரம், திருச்சி லோகநாதன் என்று.
இப்ப எல்லாம் வெளிநாடு, அமெரிக்கா போன உடன், அங்க இருக்கிற ஊர் பேரை தன்னோட சேர்த்துகிறது தான் ஸ்டைல் .
சில ஊர் பேருங்க காமெடியாய் இருக்கும். இவங்க எல்லாம் இந்த ஊர்ல இருந்தா இந்த பேரையும் தன்னோட சேர்த்து இருப்பாங்களா என்பதல்ல இங்க விஷயம்.
"சி' ன்னா சரியா வர மாதிரி சிங்கபூர், சியாடல், சிகாகோ அப்பின்னு மூணு ஊர் இருக்கு.
எதுக்கு நிறய ஓட்டு விழுதோ அதை என் பேரோடு சேர்த்து கொள்ள போகிறேன்..
1. சிங்கபூர் சின்னவன்
2. சிகாகோ சின்னவன்
3. சியாடல் சின்னவன்.
போடுங்கம்மா ஓட்டு, ஊரு பேரை பார்த்து!!!
இந்த இடத்தை எல்லாம் பார்த்ததுதான் இல்லை பேருலையாவது சேர்த்துகிறேன்
Tuesday, July 26, 2005
நம்பிக்கை ! என் கவிதை!
புது கவிதைக்கு மேத்தா, தாத்தா என்றால் ,
ஒன்று விட்ட சித்தப்பாவின் மூன்றாம் மகளின், மூத்தபெரியப்பா மகனாக சின்னவன் மட்டும் என்ன சுமமாவா..
இதோ நம்ப கவிதை !!
(சரி சரி
நிறய பேர் தங்களால் கவிதை எழுத முடியும் என்று நினைத்து எழுதுவதே ஒரு பெரிய நம்பிக்கையினால் தானே..சரியான தலைப்பு தான்.. )
தங்கலீஷ் இருக்கலாமாம் !!
போட்டியின் நடுவர்களின் தகுதி தெரியாது !
பரிசாக கிடைக்கும் வெறும் $50 க்காக
கவிதையின் இலககணம் கூட அறியாமல்
மண்டபத்தில் யாரேனும் நிச்சயம்
எழுதி கொடுப்பார்கள் என்று புலம்பி திரியும்
இந்த தருமியின்
நம்பிக்கை !
பின்குறிப்பு 1
வலைபூ தருமி அய்யாவை நான் சொல்லவில்லை. இந்த தருமி நம்ப திருவிளையாடல் நாகேஷ் சார் !
பின்குறிப்பு 2
இதை அங்க கொண்டு போய் பரிசாகவோ, உதையாகவோ வாங்கிக் கொள்ள நான் தயாராக இல்லை!
Monday, July 25, 2005
பூரி..
இதை பற்றி எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன்.என்க்கும் வேற
எழுத கிடைக்காத்தினால்...
ஆனாலும் என்ன பண்றது. இதை பற்றி நான் எழுதா விட்டால் பலருக்கு இங்கே வருத்தமாக இருக்கும். (படித்த பிறகும் வருத்தம் அதிகமாக தான் இருக்கும் என்பது வேறு விஷயம்!)
ஞாயிற்றுக்கிழமையானால் போதும் குளிக்கிறமோ இல்லையோ பக்கத்து தெரு நாயர் கடை பூரி மசாலவை விழுங்காம விடுவதில்லை , அப்புறம் தமிழில் 1001 இடத்தில் இருக்கும் இந்த வலைபூவில் அதை பற்றி எழுதாமல் விடுவதில்லை என்று குறைகூறும் குயிலி, கொத்தமல்லி அக்கா போன்றோரின் நம்பிக்கையை இந்த வாரம் பூரி செய்ய சீ சீ பூர்த்தி செய்ய முடியவில்லை .
சொல்லாம கொல்லாம நம்ப நாயர் ஊரை பார்க்க போய்விட்டதால் நான் அக்கவுண்டில் சாப்பிட்டு வரும் காசு உடனே கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்து இருக்கிறேன்.
ஆகவே பெட்டர் லக் நெக்ஸ்ட் வீக்..!
(தலைப்பை பார்த்துட்டு என்னவோ ஏதோன்னு விழுந்தடிச்சு ஓடி வந்த ஞான குடம், வாய்மூடிக்கு நன்றி!)
வழக்கம் போல, சம்பத்த பட்டவங்க, இதில் உள்ள "குசும்பை" மட்டும் எடுத்துகிட்டு என்னை கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்க வேண்டாம்.. :)))
Friday, July 22, 2005
ஷகலக்க Useless Analysis
முதல்வன் - அகில உலக சினிமாவிலேயே அதிகபட்ச அபத்த்ங்களை வாரிக்குவித்த வெற்றிப்படம் . இதில் ஒரு பாட்டு ஷகலக்க பேபி. இது குறித்தான எனது useless analysis .
மைனஸ் பாயிண்ட்ஸ்
* சொதப்பலான டான்ஸ்
* முகஞ்சுளிக்க வைக்கும் குலுக்கல்கள்
* தேவையற்ற பாடல் காட்சி
* சாதாரண கிராபிக்ஸ் காட்சிகள்
* சம்பந்தமில்லாத இந்தி டான்ஸரகள்
* நடிகர்களின் டிராமடிக் முக பாவங்கள்
* அரதப்பழசான காமிரா டெக்னிக்குகள்
* நம்பவே முடியாத குரல்கள்
* எரிச்சலூட்டும் ஸ்பானிஷ் ஜிகிடி
* சவுண்ட் ஜாஸ்தியான பின்னணி இசை
* அழுக்கான் செட்
* எங்கேயோ காப்பி அடிக்க பட்ட பாடல் லூப் கள்
பிளஸ் பாயிண்ட்
எத்திசையும் புகழ் மணக்க இருக்கும் பெரும் வங்காள தேவியே...
உன் சீரிளமை திறம் வியந்து, ஜொள்ளு விட்டு வாழ்த்துதுமே!
=====================
என்ன செய்வது.!!
நான் நானாகவும் , அவர்கள் அவர்களாகவும், நீங்கள் நீங்களாகவும்,எல்லாரும் எல்லாருமாகிவிட்ட படியால இப்படி எழுத வேண்டி இருப்பதை கண்டு சம்பந்த பட்டவர்கள் புன் முறுவலோடு ஏற்று கொள்வார்களாக.
Thursday, July 21, 2005
பிலிம் காட்டறேன்
இந்த ப்ளக்கரில் டைரக்டா படம் போட வசதி வந்தாலும் வந்தது, பதிவுகளில் படங்க தொல்லை ஜாஸ்தியாச்சு ! ஆள் ஆளுக்கு பிலிம் காட்ட ஆரம்பிச்சுட்டாங்க
இதில ரொம்ப சீரியசா தல தர்ணீ கடல குந்திகினு வானம் குழம்பு, சூரிய ரசம்னு
சிவப்பு சிவப்பாய் காட்டராரு
இந்த கேனந்து அண்ணாத்த ஆப்புவெச்சாரு, full stop ன்னு technical ஆ சொல்லிகினு அவரு ஒரு சைட்ல காட்டினு கிறாரு . படம் காட்ட ஒரு கட்சி வேற இத்ல.
நமிதா இடுப்பு பெரிசாசு, இவங்க எனது கனவு பன்னிங்க அப்பிடின்னு இன்னொரு கும்பல் இதுதான் சாக்குனு நடிகைகளின் போட்டாவ ஜலசாவ போட்டுகினு கிறாங்க
அட இதுன்னாச்சும் பரவாயில்லங்க, நமிதா அஸின் இடுப்ப பார்த்து ஜொள்ளு விடலாம்
.சில சாமிங்க சட்டையில்லாத ஆம்பிள போட்டாவ போட்டு இந்த இடுப்ப பார்த்து ரசிங்கன்னு சொல்றாங்க.
இதெல்லாம் பார்த்து நொந்து போயி நானும் ஒரு 67000 அப்பிடின்னு ப்ரிண்டு ஓசில கொடுத்த ஒரு புது கேமிரால Self portrait எடுத்தேங்க.
இதோ அது உங்களின் பார்வைக்காக.
சாரிங்க!! இடுப்பெல்லாம் காட்ட கூச்சமாயிருப்பதினால் முகம் மட்டும்.
அ ஆ வில் ரஹ்மான் குரல்
ரஹ்மானின் குரல் பொருத்தமாய் இருப்பது என்று நினைப்பது ஒரு கருத்து, அதை மறுப்பது இன்னோரு கருத்து. இதில் ஒருவர் புத்திசாலியாகவும் மற்றவரை முட்டாளாகவும் நான் எண்ணுகிறேன்
ஒரு சிலரைப்போல நான் ரஹ்மானின் குரலை வெறுப்பவனல்லன்; ஒரேடியாக மறக்க துடிப்பவன். சில பாடல்களை ரஹ்மானை தவிர வேறு யாராலும் அப்படிப் பாடியிருக்க முடியாது என்பது எ.தா.அ. இதற்கு உச்சகட்ட உதாரணமாக காதலனின் வரும் டேக் இட் ஏஸி பாடலை சொல்வேன்.
நல்ல பிகரோ குஜிலியோ அல்லது தலைக்கு வந்த பொன்ஸ்ரை ஹெல்மட்டுக்குள் வாங்கும் திறனோ - நொடியில் பரவசப்பட்டுப் போவது உண்மை
ரஹ்மானின் படைப்பு அவருக்குத்தான் தெரியும். ரஹ்மானை தவிர வேறு யாருக்கும் தமிழ் கொலை செய்ய வராது என்று சொல்வது அதீதம்.
தமிழைத் துல்லியமாக உச்சரிக்கும் பல நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். உதாரணதிற்கு உதித் நாராயாணன, சுக்வீந்தர் சிங்
என்னைப் பொருத்தவரை குரல் வளம்தான் கடைசி தகுதி, பாடலுக்குத் தேவையான உச்சரிப்பு தேவையற்றதே !!!!
கட்டாயமாக ரஹ்மான் முட்டாள் இல்லை என்று நான்
சொல்லிவிடமாட்டேன்.
ரஹ்மானின் இந்த இசைத் தொகுப்பை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுவது மிகவும் எளிது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க மேற்கத்திய இசை.
பலரும் ஒரே விதமான கண்ணோட்டத்துடன் அனுக வேண்டும் என்பது என் ஆசை இதை மறுத்து எழுத போகும் முனுசாமியும் தன் கருத்தை 'கேனத்தனம்' என்று எப்போதும் போல ஒப்புக்கொள்வார்.
ரஹ்மானின் வெறியர்கள் மன்னிக்கவும்'
( சம்பந்த பட்டவர்கள் மன்னிக்க. தவறா எடுத்துகிட்டால் நான் நல்லா செய்து இருக்கிறேன் என்று அர்த்தமாகிவிடும் !! )
கூப்பாடு 10
இவற்றை பட்டியலிடுவதற்கு எந்த ஒரு காரணங்களும் இல்லை
- எதையாவது உளற வேண்டும்.
- இல்லை யாரையாவது திட்ட வேண்டும்..
10. காபாலன்
9. சுண்டெலி
8. திருவோடு
7. முக்கல்
6. ஏஆரெஸ்
5. முட்டை
4. கிண்ணங்கள்
3. முன்னோட்டம்
2. வேலையத்த்து
1. கும்மாங் குத்து
எதிர்மறை எண்ணங்களுக்காக படிக்கும் பத்து.
இவற்றில் சில மலையாள் படங்கள் போல; பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்; யாராவது பார்த்து வீட்டில் சொல்லிட்டா மண்டகபடி கிடைக்கும்.
யாருக்கும் புரியவே கூடாது.
படம் காட்டணும்..
ஒரு 100 பின்னூட்டமாவது இருக்கனும்
10. கமர்கட்
9. பனாதை
8. தண்டை காயல்
7. கஞ்ச பிலிம்ஸ்
6. அமுதாகரண்
5. முனுசாமி
4. தோசை சட்னி
3. வாய்மூடி
2. மோசகுமாரி
1. ரோசா செல்வமணி
( சம்பந்த பட்டவர்கள் மன்னிக்க. எல்லோரும் top 10 போடறாங்க.. நானும் David Letterman மாதிரி விளையாட்டுக்கு போடறேன். சம்பந்த பட்டவங்க தவறா எடுத்துகிட்டால் நான் நல்லா செய்து இருக்கிறேன் என்று அர்த்தமகிவிடும் !! )
இந்த Top 10 க்கும், அந்த Top 10 எந்த சம்பந்தமும் இல்லங்கனு சொன்னா நீங்க நமபவா போறீங்க !
Wednesday, July 20, 2005
சென்னையை பிரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னையைப் பிரித்து 3 மாவட்டங்களாக்க வேண்டும். கோவை, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை ஒழித்த அஜீத்
இதனால் படம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பிரஷாந்த்தை வைத்து படத்தை முடித்துக் கொள்ள முடிவு செய்து அஜீத்தை அணுகினேன். அதற்கு இல்லை, இல்லை நானே நடிக்கிறேன். வேறு நடிகரை தயவு செய்து நாட வேண்டாம் என்று கூறினார். இதனால் அஜீத் குணமாகும் வரை காத்திருந்தேன்.
இந் நிலையில் 'ஜனா' படத்தை அஜீத்தை வைத்து ஆரம்பித்தேன். இதற்காக ரூ. ஒன்றரை கோடியை முன் பணமாக அவருக்கு வழங்கினேன். 2002ம் ஆண்டிலேயே படத்தை ஆரம்பித்தோம்.
இருந்தாலும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகி விட்டது. ஒரு வருடத்தில் படத்தை முடித்துக் கொடுப்பதாக கூறிய அஜீத், கார் பந்தயத்தில் கலந்து கொண்டதன் மூலம் படம் முடிய 2 ஆண்டுகள் ஆகி விட்டது. மேலும் இப்படத்தை முடிப்பதற்கு என்னைப் பல முறை அலைய வைத்து விட்டார். இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
ஜெயேந்திரருக்கு இன்றும் அனுமதி மறுப்பு
ஆண்டுதோறும் ஆடி மாத பௌர்ணமி தினத்தன்று ஜெயேந்திரர் ராமேஸ்வரம் சென்று சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். அதேபோல நேற்று காலை அவர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்றார். பொதுவாக அவர் கோவிலுக்கு வரும்போது பூரண கும்ப மரியாதை அளித்து கோவில் நிர்வாகம் வரவேற்பது வழக்கம்.
ஆனால் நேற்று ஜெயேந்திரர் அங்கு வந்தபோது அவரை வரவேற்க யாரும் இல்லை. பூரண கும்ப மரியாதையும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இதைப் பொருட்படுத்தாத ஜெயேந்திரர் தன்னுடன் வந்த பக்தர்களுடன் கோவிலுக்குள் சென்றார்.
ராமநாதசுவாமி சன்னதிக்கு வந்த அவர், கோவில் கருவறைக்குள் நுழைந்து சாமி கும்பிட ¬முயன்றார். ஆனால் அவரை கோவிலின் இணை ஆணையர் சுப்பிரமணியம் தடுத்து நிறுத்தினார். கருவறைக்குள் ஜெயேந்திரர் நுழைய அனுமதி தர வேண்டாம் என தனக்கு அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
என் தமிழ் வலை
என் தமிழ் வலைக்கு வரும் அனைவருக்கும் நன்றிகள்.
எனக்கு பிடித்த விஷயங்கள், செய்திகள் இங்கே வரும்.