Thursday, October 20, 2005
கட்டுப்பாடும் சில கருத்துக்களும்
பதிவர் 1: கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். கட்டுப்பாடு இல்லாத இடத்தில் நான் எப்பவுமே இருக்கமாட்டேன். அலுவலகத்தில் மேல் அதிகாரியின் கட்டுப்பாட்டிலும் , வீட்டில் மனைவியின் கட்டுப்பாட்டில் இருப்பதே சாலச் சிறந்தது. இதற்கு மேல் பேச எனக்கு அனுமதியில்லை.
நிருபர்: என்ன சார், இவ்வள்வு பெரிய படிப்பு படிச்சிருக்கீங்க, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா ந்னு வளர்ந்த நாட்டில் இருக்கீங்க. இப்படி பேசறிங்க ?
பதிவர் 1: கெட்ட வார்த்தையில் திட்டறதுக்கு முன்ன ஓடிப்போயிடு !
-------------------------------------------
பதிவர் 2: கட்டுப்பாடே நம்மை அடுத்த நிலமைக்கு எடுத்துச் செல்லும். இல்லாவிட்டால் இன்னும் முப்பதே நாளில் நாம் எல்லாம் அழிந்துப் போவோம்.
நிருபர்: உலகிலேயே அதிகக் கட்டுப்பாடு உள்ள நாடு வட கொரியா, அதிக சுதந்திரம் உள்ளதாய் சொல்லப்படும் நாடு அமெரிக்கா, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
பதிவர் 2: தேவையில்லாத விசயத்தில் எல்லாம் நீ மூக்கை நுழைக்கிறாய். உன் வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளம் ஏற்றி ஒரு ஆழப்பதிவு போட்டு விடுவேன். சாக்கிரத்தை.
நிருபர்: அண்ணா, என்னை மன்னிச்சுக்குங்க. இனிமே இந்த மாதிரி எல்லாம் கேட்ட மாட்டேன். விடறா சாமி..
----------------------------------------------------
பதிவர் 3: என்னது கட்டுப்பாடா? அப்ப இனி சிக்கனோட தயிர், பருப்போட நெய், கருவாடோட காரக்குழம்பு எல்லாம் முடியாதா. அட மக்கா, சாப்பாடு மனுஷனுக்கு ரொம்ப முக்கியமாச்சே. நாராயணா, நாராயணா..
--------------------------------------------------------
பதிவர் 4: இப்பத்தான் சில விவகாரமான படங்கள் பார்த்து வெச்சி இருக்கேன். எழுதறேன் அத பத்தி. அதற்கு அப்புறம் வெச்சிக்கலாம் கச்சேரியை.
நான் மேலே சொன்னது யாரையும் குறிப்பிட்டு சொன்னதில்லை. எதுவாய் இருந்தாலும் ஆட்டோ இல்லாம வாங்க. சமரசமாய் பேசி தீர்த்துக்கலாம். வரட்டா...
-----------------------------------------------------------------------
பதிவர் 5: அட நீ வேற. நானே third umpire முடிவுக்கு காத்திருக்கும் batsman மாதிரி சிவப்பா, பச்சையா என்று தெரியாம குந்தினு கீறேன். வந்துடாரு துரை கொஸ்டின் கேட்டுகினு !
------------------------------------------------------------------
July 11 உலக மக்கள் தொகை தினம். அதை பற்றியும், family planning ( குடும்பக் கட்டுப்பாடு ) பற்றியும் பதிவர்களின் கருத்துக்களை மேலே பார்த்தீர்கள். இனி சில தகவல்கள்.,
1. சராசரியாக உலகில் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1 billion
2. 1987 ல் முதல் உலகமக்கள் தொகை நாள் அறிவிக்கப்பட்டது
3. மேலதிக விவரங்களுக்கு http://www.usaid.gov/our_work/global_health/pop/news/wpd05.html
( இந்த பதிவு எதிர்மறை பதிவு, மக்களுக்கு இதனால் எந்த பிரயேசனமும் இல்லை. 40 வரி எழுதினாலும், ஒரு வரியில் கூட உபயோகமான விசயம் இல்லை என்று யாரும் சொல்லிவிடக்கூடாது எனபதற்காக மேலே கூறிய தகவல்கள் எழுதப்பட்டன என்று யாருப்பா அங்க சொல்றது ?? )
(ஆமாம், கொஞ்ச நாளுக்கு முன்னால் "கத்ரீனா" சமயத்தில் Dick Cheney யை பார்த்து, Go ---- Yoursef l என்று live TV யில் சுதந்திரமாய் கருத்து சொன்னாரே ஒருத்தர் , அவர என்ன பண்ணாங்க ?
சனநாயக முறைப்படி போட்டுத் தாக்கீட்டாங்களா ? )
Monday, October 17, 2005
சினிமா விமர்சனம்
C(Sk)inemax ல் பலான படம் முடித்தவுடன் பார்த்த பழைய படங்களுக்கு விமர்சனம் எழுதுவது சாலச் சிறந்தது.
தமிழ் வலிப்பூ உலகில் முதன்முறையா , திரைக்கு வந்து 12 மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படதிற்கான விமர்சனம் இங்கே !
Harold & Kumar go to White Castle.
போதை உண்ட ( Stoner ? ) இரண்டு நண்பர்களுக்கான ( buddy comedy ) படங்களுக்கு பெயர் பெற்ற
Danny Leiner இயக்கிய படம் இது. Dude Where is my Car போன்ற உலகத்தரம் வாய்ந்த படங்களை அளித்தவர் இவர்.
ஹாலிவுட் சினிமாக்களில் ஒரு இந்தியனையும் கொரிய இளைஞனையும் முக்கிய பாத்திராங்களா வைத்து வந்த முதல் படம் இதுவாகவே இருக்கக்கூடும். John Cho ம் , Kal Penn அற்புதமாய் நடித்து கலக்கி இருக்கும் படம் இது.
பார்த்த படத்தின் முழு கதையயும் எழுதுவதுதான் விமர்சனம் என்று நான் நம்புவதில்லை. எனவே மற்ற விமர்சனங்களை போல படத்தின் கதை இங்கு இல்லை.
பாத்திரப் படைப்பு இன்னமும் ஆழமாக இருந்திருக்கலாம். அவர்களின் பின்னணி வருவதில்லை. பல கேள்விகளுக்கு ஒற்றை வரியில் இயக்குனர் பதில் தருகிறார். அவ்வளவுதான். தைரியமாக பல குண்டர்கள் மத்தியில் ஆணித்தரமாகப் சண்டையிட எப்படி எவருக்குக் கூடியது என்பது சரியாக வரவில்லை. படிப்பு, பொருளாதார அறிவு குறைவு, அரசியல் ஈடுபாடுகள் என்று எதுவும் இல்லை என்றாலும் ஹாலிவுட் பாணியில் கடைசிச்சண்டை எங்கிருந்து அவ்வளவு சரளமாக வருகிறது என்பதை டைரக்டர் விளக்குவதில்லை. ஒருவேளை ஜெயிலில் , கஞ்சா அடிக்கும் போது கற்றுக்கொண்டாரோ என்னவோ!
என்றெல்லாம் இலக்கியத்தரமாய் ஜல்லி அடிக்காமல், Paula Garces , Malin Akerman பார்த்து ஜொள்ளு விட நான் இந்த படத்தை பார்த்தேன் என்பதை கூறிக்கொளவதில் எந்த வெட்கமும் இல்லை.
Sunday, October 16, 2005
Friday, October 14, 2005
நான் தட்டாம் பூச்சிகளை பிடிப்பதில்லை
எழுதுவதே புரியாத போது
பூவில் இருக்கும் இரு தட்டாம்பூச்சிகளுக்கு
ஏனிந்த விளக்கவுரை வேலையென
கேட்டபோது மனசிலொரு கிறுகிறு
மழை வரும் போது
தட்டாம்பூச்சிகள் குடை பிடிக்குமா
எனக்கேட்டு அனுப்பிய
தட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை
புடவைகளுக்கடியில் பத்திரமாய்
பிறந்தநாள் பரிசென
நீ பிடித்துவந்து
நாம் வாலில் நூல் கட்டி
பறக்கவிட்ட
விரல்நுனியில் ஆய் போன
தட்டாம்பூச்சி
சிலநாட்களே வாழ்ந்துமடியும்
தட்டாம்பூச்சிகளுக்குள்
கைகலப்பு சண்டை இல்லை யென
விட்டுச்சென்ற கசந்த
அந்த கடைசி அடி
மன்னிக்கவும்,
நான் இப்பொழுது
தட்டாம்பூச்சிகளை பிடிப்பதில்லை
Wednesday, October 12, 2005
ரேஸிஸம்
இதுதான் ரேஸிஸம் என்றால் இதை ஆதரிப்பதில் என்ன தவறு.
இணையத்தில் மட்டும் முகத்திரை அணிந்து கொள்ளும், இந்த மாதிரி ரேஸிஸத்தை எதிர்க்கும் போலியர்கள் தங்கள் உண்மை முகத்தை அவர்களின் மனசாட்சியிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளட்டும் !
Tuesday, October 11, 2005
லூகாஸ¤ம் ஜார்ஜார் பின்கிஸ¤ம்
ஒரு தலை சிறந்த இயக்குனரை, Jar Jar Binks யையும், R2D2 வயும் உலகுக்கு அறிமுகப்படுத்தியவருமான, ஜார்ஜ லூகாஸை கிண்டலடித்தும், எதிர்த்தும் எழுதும் ஸ்குரூ கழண்ட இராமநாதனையும், அதில் பின்னூட்டம் இடும் நியோ , மாட்ரிக்ஸ் , பாசி, உளுத்தம், பருப்பர்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இதற்கு பரிகாரமாக, உடனடியாக இரம்(?!)நாதன் Hollywood வந்து Screen Actors Guild ல் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரின் வீட்டு வாசல் முன் Vodka குடித்துவிட்டு சீ சீ வீசி போராட்டம் நடத்த Hollywood மகளிர் அணி தயாராக உள்ளது.
மற்றும், நான் கட்ட இருக்கும் Natalie Portman கோயிலுக்கு ஒரு மில்லியன் rubles கட்டாய நன்கொடை வழங்க வேண்டும்.
இராமநாதா, மன்னிப்பு கேள், இல்லையெனில் இரஷ்யாவை விட்டு ஓடு !!
(எப்படி தலைப்பிலேயே உம்மை தொகை இருப்பதால் இதுவும் ஒரு ஆழமான பதிவின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயத்தில் தமிழ் வலைப்பூ உலகம் இருக்கிறது. !! )
Monday, October 10, 2005
முகமூடி யார்??
முகமூடி யார் என்று உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கக்கூடும்.இன்னும் அவர் யார் என்று தெரியாத "கோயிஞ்சாமியா " நீங்கள் ? கவலை வேண்டாம். !!
அக்டோபர் 28
இந்த தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றுதான் முகமூடியின் முகத்திரை கிழியப்போகிறது ....
அக்டோபர் 28 க்கு என்ன விசேஷம் ?
ஏன் அன்று உண்மை வெளிய வரப்போகிறது ?
என்று சரியாக சொல்பவருக்கு ஒரு பழைய பாட்டுப் புத்தகம் பரிசாய் குலுக்கல முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். ( பரிசு உதவி மரவண்டு அய்யா அவர்கள் )
Sunday, October 09, 2005
எழுத மறந்த பதிவுகள்
- பாட்டியால் எடுக்கபட்ட புகைப்படம்
- சந்திரோதயம் மேற்கில்தான்
- Hundred best NAVELS of the century
- பருந்துக்கு பல் வலிக்குமா
- கொள்ளு திங்கலையோ கொள்ளு
சக்கரம் சுழலுது, டயர் தேயுது !
பிரேக் பிடிக்கும் போது மீதி பார்த்துக்கொள்ளலாம் !!
Thursday, October 06, 2005
தெளிவும் ஆழமும்
ஆறு அது ஆழம் இல்லை, அது சேரும் கடலும் ஆழம் இல்லை
ஆழம் எது அய்யா? அது பொம்பளை மனசு தான்யா
--- தியாகி சந்திரசேகர்
ஆழம் என்றால என்ன ? அது ரொம்ப "டீப்" பம்மா !
பெண்மனசு ஆழமின்னு ஆம்பளைக்கு தெரியும். அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்.
ஆழம் தெரியாமல் காலை விடாதே
-
அகல உழுவதில் ஆழ உழுவது நல்லது
இரண்டு காலையும் விட்டு ஆற்றின் ஆழம் பார்ப்பவன் முட்டாள்
பசிபிக் கடலின் மிக ஆழமான பகுதி Mariana Trench
கிணற்றில் ஆழத்தில் மூழ்கி இறப்பவனுக்கு நீச்சல் தெரிய வேண்டியது இல்லை
ஆழ்கடலுக்கும் சாத்தனுக்கும் இடையே எதை தேர்ந்து எடுப்பது ?
அமைதியான ஆழ்கடலில் மாலுமிக்கு வேலை இல்லை
"பிடிவாதத்தின் ஆழத்தில் அவள்" - ஞான்ஸ்
Wednesday, October 05, 2005
வழக்கமான முகமூடி பதிவு
இது என்னடா வழக்கமான பதிவு என்று புரியாமல் திண்டாடும் "கோயிந்த சாமி"களுக்காக ஒரு சிறிய விளக்கவுரை !
தமிழ்மணத்தில் "இமேஜ்" முக்கியம். நீங்கள் இப்படி பட்டவர், இப்படித்தான் எழுதுவீர்கள், எழுத வேண்டும் என்று "எழுதப்படாத" விதி இருக்கிறது. அதன்படி முகமூடியின் வழக்கமான பதிவு நீங்களும் எழுதலாம். செய்ய வேண்டியது இதுதான்.
தேவையானவை:
- தமிழ்மணத்தில் வரும் கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் படித்தல் அவசியம். ( சாதா, சோதா, ஸ்பெஷ்ல் ரவா என்று எல்லாம் பாகுபடுதாமல் அனைத்தையும் படித்தல் அவசியம் )
- கூகுளில் பட்ம் தேடும் வசதி, கொஞ்சம் போல போட்டோ எடிடிங்க்
- குழந்தைகளுக்கான கதை புத்தகம்.
செய்முறை:
- எழுதப் போகும் விஷ்யம் . இது ரொம்ப முக்கியமானது. உங்களின் பதிவு வெறும் 5, "- " ஓட்டு வாங்குமா, இல்லை 30, "-" ஓட்டு வாங்கி அமோக வெற்றி பெறுமா என்பது இதில்தான் இருக்கு . உங்களுக்கு பிடித்த ( அப்படியென்றால் பிடிக்காத என்று அர்த்தம் ) அரசியல்வாதி/நடிகர்/நடிகை/பதிவர் கூறிய அபத்த கருத்துகளை தேர்ந்து எடுங்கள் ( அதுதான் தினமும், யாராவது ,எதையாவது உளறிக்கிட்டே இருக்காங்களே ! தலைப்புக்கா பஞ்சம்).
- வில்லன் தேர்ந்து எடுத்தல் :நேற்று இரவு உங்கள் குழந்தைக்கு படித்துக்காட்டிய விலங்கு படக்கதை புத்தகத்தில் இருந்து ஒரு கொடிய விலங்கை தேர்வு செய்யுங்கள் . உதாரணதிற்கு, ஓநாய், பக்கத்து வீட்டு வெறி நாய், சிறுத்தை, புலி.
- அப்பாவி : அதனிடம் அவதிப்படும் ஒன்றையும் தேர்வு செய்யுங்கள். ( நாயிடம் கடி வாங்கிய பக்கத்து வீட்டு சிறுவன் , புலியிடம் அடிப்பட்ட முயல், சிலுக்குவார்பட்டி கோமணக் கிழவன் இப்படி. )
- புனைப்பெயர்கள் : வில்லன், ஹீரோ எல்லாம் நேரிடையாகத் புரியும் பெயரில் எழுதக்கூடாது. சுவாரிசியம் போய் விடும். உதாரணதிற்கு , நாலு விரல் கொண்ட மஞ்சள் ஆசாமி என்பது ஸிம்ஸன் என்பதை விட எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது அல்லவா ?
- பதிவுக்கு தேவையான படத்தை கூகுளுங்கள்.
- உங்களுக்கு பிடித்த நடையில் தேவையானதை எழுதி, படத்தை போட்டு, மிக்ஸியில் இரண்டு நிமிடம் "நைசாக" அரைத்து, மைக்ரோவேவ் வில் 45 செகண்ட் போட்டு எடுத்தால் சுடச்சுட வழக்கமான பதிவு ரெடி.
அதையும் படித்துவிட்டு "இது ஒரு வழக்கமான பதிவு" என்று வழக்கமாய் வரும் பின்னூட்டங்களை பார்த்து மகிழுங்கள்.
( Patent Pending: NO 45723872873 , All rights reserved)
Tuesday, October 04, 2005
கோயிந்தசாமி(கள் ) யார் ?
எல்லா பதிவுலும் அவரை(ங்களை) போட்டுதாக்க வேற சனங்க இருக்காங்க ! இன்னைக்கு மட்டுமே ஒரு 5,6 பதிவு கோயிந்தசாமிகள் பத்தியும் , அவரு இதை உருவிட்டாரு. அடுத்த புக்குல answer சொல்லுவாருன்னு போட்டு தாக்கறாங்க.
இது எல்லாம், நான் இந்த பக்கம் வருவதுக்கு முன்னாடியே குழம்பிய மட்டைகள் மட்டும் என்று நல்லா தெரியுது.
இந்த உள்குத்து, வெளிகுத்து கத்துக்க நிறைய இருக்குடோய் !
Sunday, October 02, 2005
உலக வலைபதிவர் மாநாடு!
முகமூடி, குசும்பன், VM , ஞானபீடம் , குழலி, சின்னவன் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் இருந்து சில பகுதிகள் !
ஞானபீடம் : வந்த எல்லாருக்கும் நன்றி. நாராயணா , நாராயணா !!
முகமூடி : ஞான்ஸ், யாரும் இன்னுமும் பேசவே ஆரம்பிக்கவில்லை, அதுக்குள்ள நாராயணாவா ?
ஞானபீடம்: ஆடிய பாதங்களுக்கும் , கோள்மூட்டும் நாரதனுக்கும் ஏது ஓய்வு ? நம் பணியை நாம் செய்துக்கொண்டே இருப்போம் .
குசும்பன்: பசிக்குது, சீக்கிரம் ஆர்டர் பண்ணுங்கப்பா நான் ஏற்கனவே நடத்திய லாஸ் வேகஸ் மாநாட்டிலும் இந்த சாப்பாடு பிரச்சனை தான் பெரிய பிரச்சினை ஆயிடிச்சி
முகமூடி: என்னால எதையும் சாப்ப்பிட முடியாதே. முகத்தை முழுசா இல்ல மூடி வைச்சு இருக்கேன்.
VM : கழட்டினால் தான்ய்யா எல்லாமே முடியும். ஹி ஹி. நான் சாப்பிடறதை சொன்னேன்
முகமூடி: சரி சரி.. சாப்பிடறேன். இஙக் சிறுத்தை கறி கிடைக்குமா ?
குசும்பன்: சிறுத்தை கறி சிஙப்பூரில்தான் கிடைக்கும் சாரே கொஞ்சம் அட்ஜ்ஸ்ட் பண்ணிகோங்கோ
முகமூடி : இதை மாதிரி கண்டதை சாப்பிட்டா Dr கிட்ட போக வேண்டியதுதான்
(கொஞ்சம் லேட்டாய் குழலி நுழைகிறார் .. )
குழலி : நீங்கள் சைவமா அசைவமா என்று தெரிந்துக்கொள்ள ஒரு 120 கேள்வி தயார் செய்து வருவதற்குள் கொஞ்சம் தாமதாமாகி விட்டது.
ஞானபீடம்: Dr என்றவுடன் குழலி வந்துவிட்டார், நாராயணா நாராயணா !
VM: இப்படித்தான் ஒருமுறை புனாவில் கண்டதை சாப்பிட்டுவிட்டு ஒரு Dr கிட்ட போனேன். அங்கே ஒரு கேரளா நர்ஸ் வந்து...
குசும்பன் : தமிழ்நாட்டில சினிமாவில்தான் அஸின் நயனதாரா ஆக்கிரமிப்பு என்றால் , தமிழ்நாட்டு மருத்துவர்கள் எல்லாம் இந்த மாதிரி கேரளா சேச்சிகளை நர்ஸய் வைத்து இருக்கிறார்கள். அகில உலக அஸின் ரசிகர் தலைவராகிய குழலி இதை பற்றி என்ன நினக்கிறீர்கள்?
குழலி: தமிழ்நாட்டில் தமிழ் மருத்துவம் தழைக்கவே இல்லை. எல்லாம் ஆங்கில மோகம். தமிழ்நாட்டில் தமிழச்சிகள் நர்ஸாய் இருக்க வேண்டும் என்றும் , தமிழ் மருந்துகளைத்தான் உபயோகிக்க வேண்டும் என்றும் போராட்டம் ஆரம்பிக்கப்போகிறோம்
முகமூடி : இது என்னய்யா நியாயம். அப்பாவும், மகனும் ஆங்கில மருத்துவம் படிக்கலாம். சிலுக்காவர்பட்டி கோமணக்கிழவன் அனாஸின் சாப்பிடக்கூடாதா ? போங்கய்யா நீங்களும் உங்க ..யிர் காக்கும் மருந்துகளும்
VM : வெட்கத்தால் சிவந்து வெண்ணை போன்று மிருதுவாய் இருந்த தொடைகளை அவன் கையில் ஏந்தினான். மெல்ல உதட்டருகே சென்று வாசம் பார்த்தான் . மெல்ல சிலிர்த்துக்கொண்டான்
ஞானபீடம் : அய்யா VM , butter chicken உங்களுக்கு பிடிக்கும் என்பதை இப்படித்தான் சொல்லனுமா தயிர்சாதமும் சிக்கனும் என்று பதிவெல்லாம் போட்டவனையா நான். எனக்கே சிக்கனா ?
குசும்பன்: அட என்னய்யா ! பொஸ்ரன் காரனுங்க இல்லாம இந்த மாநாடு போர் அடிக்குது! உரோமம் தொலைத்துரித்த பாஸிஸ கோழிக் கூட்டத்த்தை சாப்பிடவா இந்த மாநாடு ?
முகமூடி: குசும்பா, நீர் பேசறது என்னமோ எனக்கு புரியர மாதிரி இருக்கே ?
அனைவரும்:. பாஸிஸத்துக்கும் கோழிக்கும் என்னங்க சம்பந்தம் ?/
ஞானபீடம் : இந்த வார நட்சத்திரம் , முகத்தை மூடி , இரண்டு எழுத்து பெயரைக்கொண்ட, பெண் பெயரில் எழுதும், வளைகுடா நாட்டை சேர்ந்தவர் என்று எமது ஏஜெண்டுகள் தெரிவிக்கிறார்கள்.
VM : நீங்க சொல்றது இங்க இருக்கிற எல்லாருக்கும் பொருந்தும் . பீடம்! ஏஜெண்டை மாத்து !!
குழலி : இந்த ஹோட்டலில் வான்கோழி கறி பிரியாணி அற்புதமாய் இருக்குமாமே ? யாரும் அதை ஆர்டர் பண்ணலையா ?
இதுவரை ஏதும் பேசாமல் இவர்கள் பேசுவதை குறிப்பு எடுத்துக்கொண்ட சின்னவன் ஓட்டம் பிடிக்கிறான் !!