Tuesday, March 28, 2006

காதல் !!!





காதல் ஒரு வழி
பாதை பயணமாம்
பாவம் நான்
என் கார் இருப்பதோ
மெக்கானிக் கடையில்.

பிரேக் மாற்ற ஆயிரம் ரூபாயாம்
ஹர்ரன் ஒலி அதிகரிக்க
பத்து ரூபாய்தான் ஆனது .

என்னவளே !!
நீ சொர்கத்தில் பிறந்தவளாய்
இருக்கலாம் ! ஆனால்
நிச்சயம் நரகத்தில்தான்
வளர்க்கப்பட்டு இருக்கிறாய்
ஏனடி !
என்னை வதைக்கிறாய்.

நான் மீண்டும்
சிறுவனாக ஆகக் கூடாதா ??

சிறுவயதில் உடைந்த எலும்புகள்
சீக்கிரம் ஆறிவிட்டன.
உன்னால் இன்று உடைந்த
இதயம் எப்போது ஆறும் ??

Saturday, March 25, 2006

தேர்தல் ஜூரம்

பறவைக் காய்ச்சலை விட, மிக வேகமாக பரவி வருகிறது இந்த தேர்தல் ஜூரம். அநேக கட்சிகள் இருந்தாலும், வழமைப்போலவே இந்த தேர்தலும், இருமுனைப் போட்டித்தான். இரண்டுப் பெரிய அணிகள் கூடி நிற்கிறார்கள். இந்த முறை பமக பற்றிய ஒரு அலசு அலசுவோம் .

தோற்றம்:

பமக வின் நிறுவனர், தலைவர், இளைஞர், வலைபூ கலைஞர் முகமூடியார். இக்கட்சி தன் சொந்த நலனுக்காக ஆரம்பிக்க ப்பட்டது என்றாலும், மிக விரைவிலேயே, உலகத் தமிழர்களின் மத்தியில் பரந்த வரவேற்பை பெற்றது. வளைகுடா நாடுகள் முதல், இரஷ்யா வரையிலும், அமெரிக்க நாடுகள் முதல் நியூஸி வரையிலும் இக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருப்பது, வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்கு அரிய ஒரு எடுத்துக்காட்டு.


இது ஒரு சாதிக் கட்சி என்று அடிக்கடி எதிர்கட்சிகள் ஏளனம் செய்துக் கொண்டுத்தான் வருகிறார்கள். சொல்லை விடச் செயல் பெரிது என்று கட்சியும் அதன் தொண்டர்களும் அதற்கெல்லாம் செவிக் கொடுக்காமல் பணிச் அயராமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.




அவ்வப்போது கட்சிப் பிளவு,பொது, இணை, துணை செயலாளரின் ஆவேச அறிவிப்புகள் இருந்தாலும், கட்சியை பிளவுப்படாமல் வைத்து வழி நடாத்திவருகிறார் முகமூடியார். இன்று இருக்கும் கட்சிகளில் உட்கட்சிப் பூசல் அதிகம் (வெளிவராமல் இருக்கும் ) இல்லாத கட்சி பமக என்றால் அது மிகையாகாது.


பமக வின் தேர்தல் கூட்டணிப் பற்றி அதன் அகில உலக இணைத் துணைப் பொது செயலாளர் அளித்த அறிக்கையை நாம் கொஞ்சம் கவனித்து வாசிக்க வேண்டும். இது ஒருப் புதிய கட்சியாக இருந்தாலும், தங்களின் அரசியல் அறிவையும், சாதுரியத்தையும், தங்களின் அறிக்கைகளும், பதிவுகளும். மூலமாக தெளிவாக விளக்கி வருகிறார்கள் . அது இரசிக்கும் வண்ணமுமாக வெளிப்படுத்துவதின் மூலம் மக்களை எளிதில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.


இது ஒரு வெற்றுப் பேப்பர் கட்சி என்று சொன்னவர்களுக்கு, மூன்று வார்த்தைகளுக்கு 350க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்கள் வரவைத்து தங்களின் பலத்தையும் காட்டி இருக்கிறார்கள் .

பமக தலைவர் Indiblog தேர்தலில் அறுதிப் பெரும்பாண்மையுடன் வென்றதும் நினைவில் கொள்ள வேண்டும் இந்த தருணத்தில்.


பமக, பச்சோந்தி மக்கள் கட்சியா, பலம் வாய்ந்த மக்கள் காட்சியா

Wednesday, March 22, 2006

கல் எறிந்தவர்கள் - Uno

a.இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள்
என்று சுயசரிதை எழுதுகிறார் ஒருவர் !
இந்த குளத்தில் காதல் எறிந்தவர்கள்
என்று கவிதை எழுதுகிறார் மற்றவர்
என் மீதே கல் எறிந்தவர்களை
பற்றி நான்
என்ன எழுத ?
என் கவிதைகளைப் படிப்பதுதான்
அவர்களுக்கும் தண்டனை ?

*******************************************************************


கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...

என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !


*******************************************************************

எருதுக்கு தெரியுமா
காக்கையின் கால் வலி ??


------------------
பெளர்ணமி பாண்டியன்

Snakes on a plane- ஒரு முன்னோட்டம்

Snakes on a plane

இந்த "திகில்" படத்தின் முன்னோட்டத்தை பார்த்து அசந்துத்தான் போய் விட்டேன்.

வெறும் விமானத்தை வைத்து பயம காட்டியாகி விட்டது, பாம்பை மட்டும் அனகோன்டா அது இட்து என்று பயம் காண்பித்தாகி விட்டது. இரண்டையும் சேர்த்து பயம் காட்ட வேண்டும் என்று யோசித்த கதாசிரியருக்கும். அதை படமாக்க முன்வந்த New line Cinema ஸ்டியோக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


இதில் நடிக்கும் Samuel Jackson க்கு பாம்பை விட நிறைய பணம் கொடுத்து இருப்பார்கள் என்று நம்புவோம்.

இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா ?


1. விமானத்தில் பாம்புகள் இருக்கின்றன
2. Samuel Jackson விமானத்தில் இருக்கிறார்
3. Samuel Jackson பாம்புகளை அடித்து நொறுக்குகிறார்.
4.சுபம்.


படம் அபாராமாக ஓடி அடுத்த வருட ஆஸ்கர்களை அள்ளி குவிக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை


ஆமா, இவங்க ஏதாவது நம்ம இராமநாராயணன் படத்தை பார்த்து காப்பி அடித்து இருப்பார்களோ ?


trailer இங்கே !!!!

Sunday, March 19, 2006

இது சரக்கு வாரம்....

இது சரக்கு வாரம்
============================

மதுவை நம்பாதே
மது உடம்புக்கும் , பர்ஸுக்கும்
நல்லதல்ல !
மதுவினால் கெட்டவர்கள், அழிந்தவர்கள்
அநேகம் ...
என்றான் நண்பன் ...
அப்ப கவலையை மறக்க
யாரைத்தான் காதலிப்பது ?
அவளின் தங்கை எவ்வளவோ பரவாயில்லை
அவள் மிக சாது என்றான் !!!

--------------------------------------------------------

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணை இருப்பு.
இதிலாவது இந்த வான்கோழி மயிலாகட்டுமே


---------------------------------------------------------

நான் ஒட்டகங்களை
நம்புவதில்லை !!
பல நாள் குடிக்காமல்
இருக்குமாமே !!!!

-------------------------------------------------------


குடித்தால் கணித அறிவு வளரும்.
நன்றாக குடித்து இருக்கும்
நண்பன் சொன்னான் ...
நம்ப மாட்டேன் என்றேன் நான்
கடல் கன்னிகள் எந்த ஆடை அணிவார்கள் ?
தெரியாமல் முழித்தேன்.

ALGEBRA என்றான் அந்த கணித மேதை !

----------------------------------------
கவிஞர் பெளர்ணமி பாண்டியன்

Friday, March 17, 2006

St Patrick's Day !




வெள்ளி இரவு 11:45 PM






சனி காலை 11:00 AM