Wednesday, February 07, 2007

1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !

கவிஞர் பெளர்ணமி பாண்டியன் இதுவரை 999 கவி(வ)தைகள் எழுதி தள்ளியிருக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த 1000வது கவிதை வரைவை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து தனிமடலில் எழுதி அனுப்பிய வாழ்த்துரை உங்களின் பார்வைக்கு,

அன்புள்ள பாண்டியா,
இதுவரை உனக்கு நான்
எந்தக்கடிதமும் எழுதியதில்லை.

கடிதம் என்பது
தூரங்களின் காகித வடிவம்.

உனக்கும் எனக்கும் தூரமில்லை.

உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.

என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்

நினைவுக் கொசுக்களால்
நித்திரைதொலைந்த
கரண்ட் கட்டான இந்த காரிரவில்
உன்க்கு இந்த கடிதம் !


பொதுவாக கவிதைகள்
உணர்ச்சியின் பெளன்ஸர்களாய்
இருப்பதுண்டே தவிர
உண்மையின் குட்லெந்த் டெலிவரிகளாய்
இருப்பதில்லை !

உணர்ச்சியின் உறுமல்களுக்கும்
கீழே உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்க வேண்டும்.
அதுதான் கவிதை.

உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை !
அதனால் ஆபத்தானவை !

மீசையோடு நடிக்கும்
மாதவன் போல
கோவை சரளாவோடு சோடி சேர்ந்த
கமல்போல கவனம் ஈர்ப்பவை.

காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது
ஆனால் உன் கவிதையின் தரத்தை
அனுஅனுவாக அள்ளமுடியும்.


ஒரு டன் கடல்தண்ணீர்
0.000004கிராம் தங்கம் வைத்திருக்கிறது.
உன் கவிதைகள் முழுவதும் தங்கத்தால்
உரச்ப்பட்டு இருக்கின்றன.

பூக்களுக்குச் சுளுக்கெடுப்பதுபோல்
உன் கவிதைகள் நாக்குக்கு
சுளுக்கெடுக்கின்றன !



பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி போல்
உன் பயன்படுத்தாத முளை
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது.


உன் கங்காரு மடியை
விட்டுவெளியே வா.
உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.
நீ உன் தங்கக்கூடு தகர்.
சிறகு விரித்து வா
.சிலிர்த்து வா.
உன் ஆயிரமாவது
கவிதையோடு பறந்து வா ! பாடி வா !!

உன் வானத்தில் சூரியன்
அஸதமிக்ககாமல் இருக்கட்டும் !

8 comments:

Anonymous said...

:-))))))))))))))))))))

Anonymous said...

;-)

Boston Bala said...

: ))

PKS said...

சகலகலா வல்லவரா இருப்பீங்க போல இருக்கே. ரசித்தேன். - பி.கே. சிவகுமார்

சின்னவன் said...

அனானி ஒன்று, அனானி இரண்டு
மிக்க நன்றி

பாபா ,
இப்படி புன்சிரிப்போடு சென்று விட்டால் எப்படி. ஏதாச்சும் ஒரு ரெண்டு வரி எழுதுங்களேன்.

PKS
நன்றி.
//சகலகலா வல்லவரா
உங்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன். இப்படி தாக்குகிறீகளே !

Anonymous said...

நூறாவது பதிவுக்கு ஆள் விட்டு எழுதச் சொல்வது, ஓராண்டு முடிவுக்கு மத்தவங்க கடுதாசி போடறது. ஒரே தொல்லையாப் போச்சுப்பா உங்களோட.இதுல ஆயிரமாவது கவிதையா. கஷ்டகாலம். ஆனாலும் கவிதை கலக்கல் !

Anonymous said...

>>கவிதை கலக்கல் !

Repeat

Anonymous said...

>>கவிதை கலக்கல் !

Repeat