இந்த கதையாவது குமுதத்தில் ....
விமானம் ஏறி கலைச்செல்வியும் ,கிரிஷும் சியாட்டல் வந்து சேர்ந்தாகிவிட்டது. அலுவலகத்தின் அருகிலேயே நல்ல அபார்ட்மெண்டில் தனிக்குடித்ததனமும் ஆரம்பித்து விட்டார்கள்.
ஜனவரி மாத சியாட்டல். வெளியில் மைனஸில் குளிர் தாக்கி கொண்டு இருந்த ஒரு ஞாயிறு காலை.
"கலை, கொஞ்சம் டவல் எடுத்து தரியாடீ!! "
( அவங்க எல்லாரையும் டீ போட்டுத்தான் கூப்பிடுவாங்களாமே ) பாத்ரூமில் இருந்து குரல் கொடுத்தான் கிரிஷ்.
"டவல் கூட எடுத்துபோகத் தெரியாதா உங்களுக்கு. காலையில் டிபன் வேலையை கவனிப்பதா, இல்லை உங்களுக்கு எடுபிடி வேலை செய்வதா"
திட்டிக் கொண்டே டவலோடு வந்தாள் கலை. ( கவனிச்சிங்களா. புருஷனை திட்டறா, இந்த அடங்காபிடாறி !! )
டவலை நீட்டியவளை கட்டி அணைத்தான் கிரிஷ்.
"ஏண்டி செல்லம் கோவிச்சுகிற. இன்னைக்கு ஞாயிறுதானே. காலையிலே ஆரம்பிச்சிடலாமா " கண்ணடித்தான்.
"இராத்திரியில்தான் அது இல்லாம உங்களுக்குத் தூக்கம் வராது, இன்னைக்கு காலங் காத்தேலேயேவா" . சிணுங்கினாள்.
"ஆமாம்டி . நாளையில் இருந்து வேலைக்கு போகணும்., இன்னைக்கு விட்டா அப்ப்புறம் பகலில் சான்ஸ் கிடைக்காது."
"அப்ப என்னை கல்யாணம் செய்றதுக்கு முன்ன , என்ன செய்வீங்க."
"அப்ப எல்லாம் தன் கையே தனக்கு உதவின்னு இருந்துட்டேன். இப்பத்தான் கட்டின பொண்டாடி நீ இருக்கியே. சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு பெட்ரூமுக்கு வந்துடு."
தலையை துவட்டிக்கிட்டே ரூமுக்குள் நுழைந்தான்.
"இந்த மனுஷனனுக்கு விவஸ்தையே இல்லை."
என்றவாறே உடை மாற்றி விட்டு அறைக்குள் வந்தாள் கலை.
"என்ன ரெடியா !!"
" ம்.ம் ரெடி. முதல்ல பெட்ல படுங்க." என்றாள் கலை.
"இராத்திரியில் தான், இந்த குளிருக்கு மூக்கு அடைத்துகிட்டு விக்ஸ் தைலம் தேய்க்காமல் தூங்க முடியறது இல்லை உங்களால். இப்ப பகலில் தூங்கவும் நாந்தான் விக்ஸ் தேய்ச்சு விடனும்ன்னு அடம் பிடிச்சா எப்படி."
என்றாவறே, நெற்றியிலும், மூக்கிலும் விக்ஸ் தடவ ஆரம்பித்தாள் கலை.
இந்த கதை குமுதத்தில் வருமா ??
=================================================================================
கலை கிரிஷ் மற்ற கதைகள் படிக்க ...
கதை 1
கதை 2
கதை 3
கதை 4
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நாசமாப்போச்சு..
இந்த கதையை குமுதம் வெளியிடலைன்னா எதுக்கு அவங்க பத்திரிக்கை நடத்துறாங்க?
அதுவும் தன் கையே தனக்குதவின்னு பொன்மொழியெல்லாம் இருக்கிற கதையை கண்டவுடனே ஆனந்தக்கண்ணீர் அல்லவா பொங்கித்ததும்பும் அவர்கள் கண்களிலிருந்து...
ஆமா சின்னவனைத்தான் கதையெழுத அனுப்புறீங்களா?
இத அனுப்பும்யா... கண்டிப்பா குமுதம் வெளியிடும். அதுவும் அந்த கடைசி விக்ஸ் பாரா இல்லைன்னா, க்யாரண்டி...
இந்த கதையாவது குமுதத்தில் .... ::
இத அனுப்பும்யா... கண்டிப்பா குமுதம் வெளியிடும். அதுவும் அந்த கடைசி விக்ஸ் பாரா இல்லைன்னா, க்யாரண்டி...
எங்கே ஆபாசமாய் போய்விடுமோ என நினைத்தேன். நல்ல நகைச்சுவை. சுஜாதா கதை எழுதுவதை நிறுத்திவிட்டாராம். குமுதமும் சர்குலேஷன் அதிகம் உள்ள ஆர்காட் ரோட் டைம்ஸை பின் பற்றி விளம்பரங்கள் மட்டும் போட போறங்களாம் :)
இதுதாங்க டிபிக்கல் குமுதம் கதை. ஆனாலும் இப்படி அந்த க்ரிஷும் கலையும் இப்படி எல்லார் கையிலையும் மாட்டிக்கிட்டு அவஸ்தைப் படறாங்களே!
Veiyidum veliyidum veliyidum :-))
//இத அனுப்பும்யா... கண்டிப்பா குமுதம் வெளியிடும்//
கண்டிப்பா
அடி ஆச்சீ
தன்கையாலே விக்ஸ் எடுத்து தடவிப்பாருன்னு சொல்ல வந்தேங்கிறது உங்களுக்குத்து தெரியாதா என்ன ?
//ஆமா சின்னவனைத்தான்
//கதையெழுத அனுப்புறீங்களா
அப்படின்னா ?????
மாஸ்காரே
தன்யனானேன். சுகம்தன்னே ?
சிவா, இளா
மிக்க நன்றி !!
கொத்ஸ்
இது டிபிகல் குமுதம் கதை என்று சர்டிபிகேட் கொடுத்ததுக்கு நன்றி. எவ்வளவு நாளாய் குமுதம் படிக்கிறோம். அதில் வரும் ஒரு பக்க கதையின் டெம்பிளேட் நமக்கு தெரியாதா என்ன !!!
லேட்டாவந்தாலும் லேட்டஸ்டா இருக்கு ! பாராட்டுக்கள் !
சுஜாதா புண்ணியத்தில் ...கதை கதையாம் காரணமாம் !
:))
கோவி கண்ணன்
பஞ்ச் டையலாகோட வந்து இருக்கீங்க. நன்னி !
PKS
நன்னி !
அப்ப குமுதத்துக்கு அனுப்பிடலாம்னு சொல்றீங்க. அனுப்பிடறேன்.
சேதுக்கரசி
நன்றி. குமுதத்தின் ஒரு பக்க கதையின் டெம்ப்பிளேட் எல்லாருக்கும் அத்துபடி போல இருக்கு !
Nice story
Anon
Thanks
Post a Comment