Tuesday, December 04, 2007

கொத்தனாரின் கொலைவெறி

கொத்ஸின் நூறாவது பதிவாம், பட்டி மன்றமாம் !

வெயிலடித்துக் கொண்டே
மழை பொழிவது போல்
தெண்டுல்கர் 99 இல் அவுட் ஆகி
இந்தியா ஜெயிப்பதுப் போல்
இன்பம் துன்பம் இரண்டும்
இழையோடும் தருணம் இது.

தமிழை இணையத்தில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய
கொத்ஸ் பல நேரங்களில்
நகராமலும், நகரமுடியாமலும்
சில நேரங்களில் பின்னோக்கியும் செல்வது ஏன் ?

சரியான கேள்வி,
சாட்சிகள் கிடைக்காத வேள்வி !!

கோமாவில் கிடப்பவனுக்கு
தேதி எதுக்கு ?
உனக்கும் மட்டும் ஏன் இந்த கேள்வி ?

என் சுயநலத்தில் பொது நலமும் சார்ந்து இருக்கிறது !


யுத்தங்களும் , சத்தங்களும்,
ரத்தங்களுக்கும் மத்தியில்
என் நெடுங்கனவு நீண்டு கொண்டே இருக்கிறது!!

என்ன கனவு அது ?
எப்பொருள் பற்றியது ?


பின்னூடமே வராத கொத்ஸின்
பதிவு எப்போது வரும் ?

பூமியோடு நான் மட்டும்
சுற்றிக் கொண்டே இருக்கிறேன்.
என் நிறைவேறாத
கனவை நெஞ்சில் சுமந்துக் கொண்டே !!!


பெளர்ணமி பாண்டியன்.

5 comments:

said...

உங்க ஆசை ஒரு நாளும் நிறைவேறப் போறதில்லை:-))))

said...

முதலில் நம்மளை வெச்சு நமக்கு அலர்ஜியான கவுஜ எழுதியதுக்குக் கண்டனம்.

ரெண்டாவது உம்ம கனவை நீர் காண்பதற்கு முன்னமே நிறைவேற்றி வைத்திருக்கிறேன். பார்க்கவும். .

மூன்றாவது மே மாசம் ஒரு பதிவு போட்டுட்டு சும்மா இருந்த உம்மை எழுந்து ஒரு பதிவு போட வெச்சதுக்காவது நம்ம பட்டிமன்றம் உபயோகப்பட்டத நினைச்சா சந்தோஷமா இருக்கு.

நாலாவது

//தமிழை இணையத்தில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய
கொத்ஸ//

யப்பா ராசா, இந்த முன்னெடுத்துச் செல்வது, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது, முன்னோடியா இருப்பது - இதுக்கெல்லாம் நிறையா ஆளுங்க இருக்காங்க. நாம எல்லாம் சும்மா பொழுது போகாம வலைப்பதிய வந்தவங்க. இப்படி எல்லாம் ஏன்யா ஏத்திவிட்டு அடிவாங்க வைக்கலாமுன்னு ஐடியா? வேணாம் ராசா. விட்டுடு.

said...

இந்தக் கடைய ஏன் சாத்தியே வச்சிருக்கீங்க?

said...

ஆகா ஆகா அருமை...

said...

//
யப்பா ராசா, இந்த முன்னெடுத்துச் செல்வது, அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது, முன்னோடியா இருப்பது - இதுக்கெல்லாம் நிறையா ஆளுங்க
இருக்காங்க
//
இப்படி சொல்லி 'எஸ்' ஆகுவதை நான் கன்னா பின்னாவென கண்டிக்கிறேன்.

//
இப்படி எல்லாம் ஏன்யா ஏத்திவிட்டு அடிவாங்க வைக்கலாமுன்னு ஐடியா? வேணாம் ராசா. விட்டுடு.
//
எல்லாம் ஒரு பாசம்தான்