இராகவன், ஆராதனா,மாயா என்ற வட மொழி ஆரிய பெயர்களுடையவர் நல்லவராகவும், வல்லவராகவும், அமுதன், இளமாறன் என்ற திராவிடத் தமிழர்களை ,காம கொடூரனராகவும், கொலைகாரராகவும் காட்டுவதிலிருந்தே, இப்படத்தின் கதாசிரியரின்/இயக்குனரின் அடிவருடித்தனம் அப்பட்டமாய் தெரிகிறது.
தனித் தமிழில் எப்போதும் கதைப்பதாகவும், கவிதை எழுதிக் கொல்லும் அந்த நடிகர் தன் வடமொழிப் பெயரான கமலஸாஸன் என்பதை இவ்வளவு நாள் வரையிலும் தாமரைசிரிப்பாளன் என்று மாற்றிக் கொள்ளாதிலேயே அவரின் ஆரியப் பற்று அப்பட்டமாகிறது.
$10 டிக்கெட்டுக்கும், $20 நொறுக்கித் தீனிக்கும் செலவழிக்காமல், நியாயமாய் இணையத்தில் இந்த படத்தை பார்த்தில் எழுந்த சில கேள்விகள்.
1. அடுத்த கெளதம் படத்தில் ஜோதிகா எப்படிக் கொல்லப்படுவார் ?
2. கெளதம் பட வில்லன்கள் அனைவரும் ஒரே சலூனில்தான் முடி வெட்டிக் கொள்கிறார்களா ?
3. அமெரிக்காப் போகும் போது Econamy class பயணம் செய்யும் கமல், ஜோதிகாவுடன் திரும்ப வரும் போது , ஏன் First Class வருகிறார் ?
4.அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft ?
5. கமல் ஜோடி கமலினி, அப்படியென்றால் ரஜினியின் அடுத்த ஜோடி ரஜினியினி ?
6. கை, மார்பு என்று குத்தாமல், முதுகில் இளமாறன் , பச்சைக் குத்தியிருப்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா ?
7. Seriously, shit இந்த இரண்டு வார்த்தைகளில் எந்த வார்த்தை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது ?
8. மனைவியைக் கொல்லும் வில்லனை, போலிஸ்கார கதாநாயகன் இதுவரை எத்துனைப் படத்தில் பழிவாங்கி இருப்பான்?
பினா குனா 1:
முதல் பத்தி , விரைவில் வலைப்பூவில் இந்தப் படத்தை பற்றி எழுதப் படப் போகும் விமர்சனம் என்று, துப்பறியும் பாம்பு குழுவினரின் ஆறாவது உறுப்பினர் , சிலுக்குவார்ப் பட்டி சின்னக் கிழவனார், எமக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
பினா குனா 2:
இந்தப் பதிவுக்கு மட்டும் கலர் பென்சில் இலவசமாய் அளித்த குசும்பனாருக்கு நன்றிகள்.
Thursday, August 31, 2006
Subscribe to:
Posts (Atom)