யாருய்யா இந்த விளையாட்ட ஆரம்பிச்சது ?
சுகுராய் ஒன்னு , இரெண்டு கேள்வி கேட்டமா, அடுத்த வேளையா பார்ப்போமா என்பதை விட்டு. அனுமான் வாலு கணக்கா இவ்வளோ கேள்விங்க. நானே இந்த பதிவின் கடவுச்சொல்ல மற்ந்து போயிருத்த நேரத்தில், கொத்ஸ், கொத்தி விட்டுராரு. உங்க விதி. படித்து தொலைங்க..
1 .எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
அ) நான் பிறந்த்தே ஒரு தியேட்டரில்தான், நினைத்து - ஏன் ஹீரோவும், ஹீரோயினும் கிட்ட வரும் போது ரோஜாப்பூ காட்டறாங்கனுத்தான்.
ஆ) என்னுடைய பதினெட்டாவது வயதில், சக்கரக்கட்டி. நினைத்தது, சாந்தனுவுக்கு அவனுடைய அக்கா நல்லாவே இருக்கிறார்ன்னு.
இ)மூன்றாம் பிறை. சுப்பரமணிய வீட்டுக் கூட்டி போலாமேன்னு நினைச்சேன்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அ ) மணாளனே மங்கையின் பாக்கியம்.
ஆ) தசாவதாரம்
இ) புது வசந்தம் ( ஒரு உலகப் கோப்பை கால் பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா , கேமரூனிடம் அடிவாங்கிய தினத்தில் பார்த்தது )
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
அ) தசாவதாரம் . கேமராபிரிண்ட் சரியா இல்லயேன்னு உணர்ந்தேன்.
ஆ) மைக்கேல் மதன காமராஜன் - ரூபிணி இப்ப எங்கே இருக்காருன்னு யோசித்தேன்.
இ) சபாபதி - இந்த படமெல்லாம் கூட யூடியுபில் இருக்கான்னு
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அ) இராஜாதி இராஜா - டிக்கெட் வாங்க போன இடத்தில் கூட்டதில் அடி வாங்கிய சம்பவம் மிகவும் தாக்கியது
ஆ) இராமராஜனின் அனைத்து படங்களும்
இ) ஆடி வெள்ளி ..
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அ) சினிமாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன ?
ஆ) தமிழ் சின்மாக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டிய கட்டாயம்
இ) பாபிலோனா, காங்கிரஸில்/பிஜேபியில் சேரமுடியாமல் இன்னும் தவிப்பது
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அ) ஜகன் மோகினியில் பேய் அடுப்பில் கால் வைப்பது .
ஆ) ஆடிவெள்ளி.
இ) PC சிரிராமின் கேமரா ஜாலங்கள்
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
அ) ஆம், கிஸ் கிஸ்னா ரொம்ப பிடிக்கும்
ஆ) இல்லை.
7.தமிழ்ச்சினிமா இசை?
அ) 80களின் இரசிகன். புதுப் பட பாடல்கள் நிச்சயம் கேட்பதில்லை/பிடிப்பதில்லை.
ஆ) ஆங்கிலப் பாடல்கள் மட்டுமே
இ) ஆங்கிலத்தில் இருந்து உருவப்பட்ட தமிழ் பாடல்கள் மட்டுமே
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
அ) தமிழ் தவிர வேற எதுவும் புரிவதில்லை. பாதி தமிழ் படங்க்ளே இப்ப புரிவதில்லை
ஆ) நாம் பார்க்கிற படங்களுக்கு மொழியே தேவையில்லை ( ஹி ஹி )
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அ) அருமை நண்பன் இப்ப ஒரு பெரிய பாடலாசிரியன். அவனுக்கு அப்ப அப்ப, பாடல் வரிகள் எழுதிக் கொடுப்பதுண்டு
ஆ) குழந்தை நட்சதிரமாய் சில/பல படங்களில் வாலை காட்டி இருக்கிறேன்
இ) நான் எது செய்தாலும் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை. தமிழ் சினிமாவாவது பிழைத்துப் போகட்டும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அ) ஒளிமயமாக இருக்கும்
ஆ) ஒலிமயமாக இருக்கும்
இ) வருங்கால முதல்வர் கோழம், பஞ்ச் டயலாக் இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அ) தமிழனுக்கு தீபாவளிக்கு நமீதா என்ன பிராண்ட் சீக்காய் போட்டு குளிக்கிறார் என்றுத் தெரியாமல் பைத்தியம் பிடிக்கக் கூடும்.
ஆ) எனக்கு ஒன்றும் ஆகாது. நான் பார்க்கும் படங்களுத்தான் மொழியே தேவையில்லையே
இ)இந்த மாதிரி தொடர் சினிமா கேள்விகள் நிற்கும்.நானும் எழுதாம தப்பித்துக் கொள்வேன்
Friday, October 24, 2008
Subscribe to:
Posts (Atom)