Tuesday, December 04, 2007
கொத்தனாரின் கொலைவெறி
வெயிலடித்துக் கொண்டே
மழை பொழிவது போல்
தெண்டுல்கர் 99 இல் அவுட் ஆகி
இந்தியா ஜெயிப்பதுப் போல்
இன்பம் துன்பம் இரண்டும்
இழையோடும் தருணம் இது.
தமிழை இணையத்தில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய
கொத்ஸ் பல நேரங்களில்
நகராமலும், நகரமுடியாமலும்
சில நேரங்களில் பின்னோக்கியும் செல்வது ஏன் ?
சரியான கேள்வி,
சாட்சிகள் கிடைக்காத வேள்வி !!
கோமாவில் கிடப்பவனுக்கு
தேதி எதுக்கு ?
உனக்கும் மட்டும் ஏன் இந்த கேள்வி ?
என் சுயநலத்தில் பொது நலமும் சார்ந்து இருக்கிறது !
யுத்தங்களும் , சத்தங்களும்,
ரத்தங்களுக்கும் மத்தியில்
என் நெடுங்கனவு நீண்டு கொண்டே இருக்கிறது!!
என்ன கனவு அது ?
எப்பொருள் பற்றியது ?
பின்னூடமே வராத கொத்ஸின்
பதிவு எப்போது வரும் ?
பூமியோடு நான் மட்டும்
சுற்றிக் கொண்டே இருக்கிறேன்.
என் நிறைவேறாத
கனவை நெஞ்சில் சுமந்துக் கொண்டே !!!
பெளர்ணமி பாண்டியன்.
Thursday, May 03, 2007
ஹாலிவுட்டில் சிவாஜி ! அசோக் அமிர்தராஜ் தயாரிப்பு
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளாரான அசோக் அமிர்தராஜ் தன்னுடைய ஹைட் பார்க் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளிவர இருக்கும் சிவாஜி படத்தை ஆங்கிலத்தில் எடுக்கப் போவதாக நேற்று இரவு இலாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் அறிவித்தார். இவர் ஏற்கனவே சிவாஜி பட இயக்குனரான ஷங்கரை வைத்து ஜீன்ஸ் என்ற படத்தை தயாரித்தது நீங்கள் அறிந்ததே. இந்த படத்துக்கும் ரஹ்மானே இசை அமைப்பார் என்றும் அவர் அறிவித்தார்.
சூப்பர்ஸ்டார் பாபாவை சந்திக்க இமயமலை போய்விட்டார் என்று சற்றுமுன் வலைப்பதிவை பார்த்தும் தாம் தெரிந்துக் கொண்டதால் இப்படத்தில் கதாநாயகனாக டாம்க்ரூஸ் அல்லது டாம் ஹான்க்ஸ் நடிக்க கூடும் என்றார் அவர். கதாநாயகியாக ஜெஸிக்க ஆல்பாவை தேர்ந்து செய்து இருப்பதாகவும், விவேகின் கதாபாத்திரத்துக்கு எட்டி மர்ப்பியே சரியான ஆள் என்றும் அவர் தெரிவித்தார்.
Fun Fun உன் லவ் Fun
Eddie murphy போல naughty
என்ற வரிகள் ஏற்கனவே சிவாஜி படப்பாடலில் இருப்பதையும் அவர் நினைவுப்படுத்தினார்.
படத்துக்கு பழம் பெரும் ஹாலிவுட் கதாநாயகன் மார்லன் பிராண்டோ நினைவாக மார்லன் என்றும் பெயர் சூட்டவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Female Chorus:
Is he moon is he sun
Is he the choosen one
Come come geeta and reeta
He is the roaring cheetah !!
Male Chorus :
Antartica, africa, australia,bostwana,
When he comes back we all get nirvana
Hero :
How can I ever forget
running behind that brunette !
street fights strip club
eating that veggie sandwich sub !
படத்தின் கதா நாயகன் அறிமுகப்ப பாடலாக இது இருக்ககூடும் என்று அதிகாரப் பூர்வமற்ற நமது செய்தியாளர் பெளவுர்ணமி பாண்டியன் தெரிவிக்கிறார்.
படத்தின் வெற்றிக்கு எமது வாழ்த்து(க்கள்) !!

Thursday, February 08, 2007
Wednesday, February 07, 2007
1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !
அன்புள்ள பாண்டியா,
இதுவரை உனக்கு நான்
எந்தக்கடிதமும் எழுதியதில்லை.
கடிதம் என்பது
தூரங்களின் காகித வடிவம்.
உனக்கும் எனக்கும் தூரமில்லை.
உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.
என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்
நினைவுக் கொசுக்களால்
நித்திரைதொலைந்த
கரண்ட் கட்டான இந்த காரிரவில்
உன்க்கு இந்த கடிதம் !
பொதுவாக கவிதைகள்
உணர்ச்சியின் பெளன்ஸர்களாய்
இருப்பதுண்டே தவிர
உண்மையின் குட்லெந்த் டெலிவரிகளாய்
இருப்பதில்லை !
உணர்ச்சியின் உறுமல்களுக்கும்
கீழே உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்க வேண்டும்.
அதுதான் கவிதை.
உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை !
அதனால் ஆபத்தானவை !
மீசையோடு நடிக்கும்
மாதவன் போல
கோவை சரளாவோடு சோடி சேர்ந்த
கமல்போல கவனம் ஈர்ப்பவை.
காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது
ஆனால் உன் கவிதையின் தரத்தை
அனுஅனுவாக அள்ளமுடியும்.
ஒரு டன் கடல்தண்ணீர்
0.000004கிராம் தங்கம் வைத்திருக்கிறது.
உன் கவிதைகள் முழுவதும் தங்கத்தால்
உரச்ப்பட்டு இருக்கின்றன.
பூக்களுக்குச் சுளுக்கெடுப்பதுபோல்
உன் கவிதைகள் நாக்குக்கு
சுளுக்கெடுக்கின்றன !
பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி போல்
உன் பயன்படுத்தாத முளை
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது.
உன் கங்காரு மடியை
விட்டுவெளியே வா.
உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.
நீ உன் தங்கக்கூடு தகர்.
சிறகு விரித்து வா
.சிலிர்த்து வா.
உன் ஆயிரமாவது
கவிதையோடு பறந்து வா ! பாடி வா !!
உன் வானத்தில் சூரியன்
அஸதமிக்ககாமல் இருக்கட்டும் !
Tuesday, January 16, 2007
இந்த கதையாவது குமுதத்தில் ....
விமானம் ஏறி கலைச்செல்வியும் ,கிரிஷும் சியாட்டல் வந்து சேர்ந்தாகிவிட்டது. அலுவலகத்தின் அருகிலேயே நல்ல அபார்ட்மெண்டில் தனிக்குடித்ததனமும் ஆரம்பித்து விட்டார்கள்.
ஜனவரி மாத சியாட்டல். வெளியில் மைனஸில் குளிர் தாக்கி கொண்டு இருந்த ஒரு ஞாயிறு காலை.
"கலை, கொஞ்சம் டவல் எடுத்து தரியாடீ!! "
( அவங்க எல்லாரையும் டீ போட்டுத்தான் கூப்பிடுவாங்களாமே ) பாத்ரூமில் இருந்து குரல் கொடுத்தான் கிரிஷ்.
"டவல் கூட எடுத்துபோகத் தெரியாதா உங்களுக்கு. காலையில் டிபன் வேலையை கவனிப்பதா, இல்லை உங்களுக்கு எடுபிடி வேலை செய்வதா"
திட்டிக் கொண்டே டவலோடு வந்தாள் கலை. ( கவனிச்சிங்களா. புருஷனை திட்டறா, இந்த அடங்காபிடாறி !! )
டவலை நீட்டியவளை கட்டி அணைத்தான் கிரிஷ்.
"ஏண்டி செல்லம் கோவிச்சுகிற. இன்னைக்கு ஞாயிறுதானே. காலையிலே ஆரம்பிச்சிடலாமா " கண்ணடித்தான்.
"இராத்திரியில்தான் அது இல்லாம உங்களுக்குத் தூக்கம் வராது, இன்னைக்கு காலங் காத்தேலேயேவா" . சிணுங்கினாள்.
"ஆமாம்டி . நாளையில் இருந்து வேலைக்கு போகணும்., இன்னைக்கு விட்டா அப்ப்புறம் பகலில் சான்ஸ் கிடைக்காது."
"அப்ப என்னை கல்யாணம் செய்றதுக்கு முன்ன , என்ன செய்வீங்க."
"அப்ப எல்லாம் தன் கையே தனக்கு உதவின்னு இருந்துட்டேன். இப்பத்தான் கட்டின பொண்டாடி நீ இருக்கியே. சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு பெட்ரூமுக்கு வந்துடு."
தலையை துவட்டிக்கிட்டே ரூமுக்குள் நுழைந்தான்.
"இந்த மனுஷனனுக்கு விவஸ்தையே இல்லை."
என்றவாறே உடை மாற்றி விட்டு அறைக்குள் வந்தாள் கலை.
"என்ன ரெடியா !!"
" ம்.ம் ரெடி. முதல்ல பெட்ல படுங்க." என்றாள் கலை.
"இராத்திரியில் தான், இந்த குளிருக்கு மூக்கு அடைத்துகிட்டு விக்ஸ் தைலம் தேய்க்காமல் தூங்க முடியறது இல்லை உங்களால். இப்ப பகலில் தூங்கவும் நாந்தான் விக்ஸ் தேய்ச்சு விடனும்ன்னு அடம் பிடிச்சா எப்படி."
என்றாவறே, நெற்றியிலும், மூக்கிலும் விக்ஸ் தடவ ஆரம்பித்தாள் கலை.
இந்த கதை குமுதத்தில் வருமா ??
=================================================================================
கலை கிரிஷ் மற்ற கதைகள் படிக்க ...
கதை 1
கதை 2
கதை 3
கதை 4
Friday, January 12, 2007
Best of 2007!
Person of the Year 2007 .
உலகின் மிக அதிர்ஷ்டசாலியான சிறுவன். பெயர் தெரியாது. ஆனால் இந்த படம் மட்டும் போதும் , இனி இவன் என்ன சாதனை செய்தாலும், Jessica Alba உடன்
நீச்சலடித்த பையன் என்ற பட்டம் மட்டுமே மிச்சம் !

மிகச் சிறந்த பாடல்
நோரா ஜோன்ஸின் Wake Me up, புதிய ஆல்பம் Not too late !!
. பாடலை இங்கு கேடகலாம். . பாடலை இங்கு கேட்கலாம்.
மிகப் பெரிய விளையாட்டு வீரர்
வேற யாரு பெக்காம்தான். $250 மில்லியனாம். வாரத்துக்கு ஒரு மில்லியன். வாழ்க லாஸ் ஏஞ்சலிஸ்
நூறாண்டு விழா கொண்டாடும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு.
இது பொம்பளைங்க சமாச்சாரம். நூறு வருஷம் ஆயிடுச்சாமாம். In Loving Mammarry !!!
மிகச் சிறந்த திரைப்படம்.
Blades of Glory.
Will Ferral இருக்கார். இதை விட வேறென்ன வேண்டும். மிகச் சிறந்தப் படமாக இதை தேர்ந்து எடுக்க.
Tuesday, November 07, 2006
நம்பமுடியவில்லை.
இது உண்மையா ? உண்மையிலே நடந்து விட்டதா ? சாத்தியமா இது ?
ஏன் ?
எப்படி இது நடந்தது ?
இது நடக்கப் போகிறது என்று என் முன்னரே தெரியாமல் போய்விட்டது. ?
கூட்டுக் குடும்பத்திலே குழப்பம் வரவைத்தது யார் ?
குருவிக் கட்டியகூட்டுக்குள்ளே குண்டு வைத்தது யார் ?
இனி நான் என்ன செய்வது ?
எவ்வளவு நாள் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்?
இறைவா !! ஏன் இந்த சோதனை ?
Monday, October 30, 2006
வயசுப் பொண்ணு
மனைவியின் கதறலைக் கேட்டு, படித்துக் கொண்டு இருந்த பேப்பரை எறிந்துவிட்டு குரல் வந்த பாத்ரூமை நோக்கி ஓடினார் பரமசிவம்.
"என்ன ஆச்சு? ஏன் இந்த கத்து கத்தறே"
பாத்ரூமில் அவர்களின் செல்ல மகள் வர்ஷா அழுதுக் கொண்டு தலைகுனிந்திருந்தாள். அறை முழுவதும் அவள் எடுத்து இருந்த வாந்தி !
"என்னடி ஆச்சு? ஏன் இந்த வாந்தி. யாரு காரணம் இதுக்கு ? புதுசா பக்கத்து வீட்டுக்கு வந்து இருக்கும் இராஜாவா ?"
வர்ஷா பதில் ஏதும் சொல்லாமல் அழுதுக் கொண்டு இருந்தாள்.
"பண்றதெல்லாம் பன்ணிட்டு, இப்ப ஏண் வாயைத் தொறக்க மாட்டேங்கறே ".
எல்லாம் நீ கொடுக்கற செல்லம். ஒரு வயசு பொண்ணை கண்ட பசங்க கூட எல்லாம், இவளை சுத்த விட்டு இருக்க. இப்ப பாரு இங்க வந்து நிக்குது. இனி நான் என்ன பண்றது. தெரு ஊரில எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு அவமானம். தலைக் கட்ட முடியுமா ?
என்னங்க பண்றது ? அழுதாள் மனைவி.
வெற என்ன? . டாக்டருக்கு போன் பண்ணு. யாருக்கும் தெரியாம , இத முடிச்சற வேண்டியதுதான்.
"அப்பா. டாக்டரெல்லாம் வேண்டாப்பா ." அழுதாள் வர்ஷா ..
பக்கத்து வீட்டுக்கு புதுசா வந்த ஐந்து வயசு பயனோட சேர்ந்து கிட்டு தன் ஒரு வயசு பொண்ணு தீபாவளிக்கு வந்த பலகாரத்தை எல்லாம் தின்று வாந்தி எடுப்பதை பற்றி கவலைப் பட்டுக் கொண்டே டாக்டருக்கு போன் செய்ய தொடங்கினார் பரமசிவம்.
Wednesday, October 25, 2006
சில சில
பொழுது போகாம எழுதறேன் இந்த blog
பனிக்காலம் வீதி முழுவதும் ஒரே fog
புது இடம், கும்மிருட்டு அமாவாசை மாலை
இடம்மாறி வைத்து விட்டேன் இடது காலை
துரத்தி வந்து கடிச்சது தெரு dog
-------------------------------------------------------
கவலை வேண்டாம் எப்போதும் chill
வேலை செய்யணும், காசு சேர்கணும் still
ஊர் சுத்தணும் எனக்கு தேவை மஜா
யாருக்கும் நான் தூக்கக்கூடாது கூஜா
இருக்கவே இருக்கு தாத்தாவின் சொத்து will
--------------------------------------------------
பெளர்ணமி பாண்டியன்
Thursday, September 21, 2006
சில கிஸ்கிஸ்கள்
1. இரசிகர்களிடம் மடாரென்று சரிந்துக் கொண்டு இருக்கும், டேமேஜான இமேஜை சரியாக்க உச்ச நடிகர் பல அதிரடி முடிவுகள் எடுத்து இருக்கிறாராம். முதல் அறிவிப்பு இந்த வாரமே வருதாமே?
2. பிரபல ஹோட்டல் அதிபரோடு அந்த இளம் நடிகை இப்போது சுற்றி வந்தாலும். நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் செய்திகள் வந்தாலும், நடிகையின் லூட்டிகளைப் பார்த்து ஹோட்டல் பார்ட்டி ஜகா வாங்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாராம்.
3. அந்த பின்னழகு நடிகை புதுப் படங்களை ஒத்துக் கொள்ளாதாதற்கு காரணம் குவா-குவா தானாம் .
4.ஐந்தெழுத்து இளம் நடிகை சமீபத்தில் தன் ஆதர்ச பாடகரை ஒரு பார்ட்டியில் பார்த்ததும் முத்த மழையில் குளிப்பாட்டினாராம். இதனால் பாடகர் வீட்டில் அடிதடியாம் .
5. அக்கா நடிகையை பார்த்து பொறாமையில் தங்கை நடிகையும் ஏகப்பட்ட ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் வாய்ப்பு அவ்வளவாக வராததில் நொந்துப் போய் இருக்கிறாராம்.
Wednesday, September 20, 2006
இட ஒதுக்கீடும் க்ரீம் லேயரும்
நீண்ட நாட்களாய் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று, நண்பர்கள் வலியிறுத்தி வந்தாலும் இடை விடாத அலுவலக பணியினால் இன்றுத்தான் எழுத நேரம் கிடைத்தது.
க்ரீம் லேயர் எப்படி வரையறுப்பது, இட ஒதுக்கீடு எப்படி செய்வது ?
எச்சரிக்கை: இந்த பதிவு, கிட்டத்தட்ட 1000 வலைப்பதிவுகள், 100 புத்தகங்கள், 10 லைப்ரரிக்கு செம்று ஆராயந்து எழுதப்பட்டது. புள்ளி விவரங்களில் எதேனும் தவறு இருந்தால் தெரிவிக்கவும்.
இட ஒதுக்கீடை மறுக்கவோ மறக்கவோ முடியாது. இட ஒதுக்கீடு என்று வந்து விட்டால் க்ரீம் லேயர் இல்லாமலா ? இல்லை இட் ஒதுக்கீடுதான் பொய் சொல்லுமா ?
நம் அனைவருக்கும் தேவையான இட ஒதுக்கீடு இங்கே !
Monday, September 11, 2006
என்னைப் போல நீயும்.
ஸிம்ஸ்ன்ஸ் ஐம்பதாவது ( குத்து மதிப்பாத்தான். எவ்வளவு நாளாய் வந்துக் கொண்டு இருக்கிறது ) ஸீஸ்ன ஆரம்பிப்பதை முன்னிட்டு ஒரு ஸ்பெஷல்.
உங்களைப் போன்ற ஸிம்ஸன்பாத்திரம் வேண்டுமா ? பொத்தான்களை அமுக்குங்கோ
Thursday, September 07, 2006
சில சந்தேகங்கள்
1. சில்லுன்னு காதல் வந்தால் HOT ஆ கல்யாணம் வருமா ?
2. ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். ரஜினி ஒரு வார்த்தை சொன்னா நூறு வார்த்தை சொன்ன மாதிரி. அப்ப, ரஜினியின் ஒரு படம் ஒரு இலட்சம் வார்த்தைக்கு சமமா ?
3.தமிழ் பெயராக தங்கள் பெயரை மாற்றிக் கொண்டால் நடிக/நடிகையருக்கும் வரி விலக்கு உண்டா ?
4. பூமி உருண்டையாக இருக்கிறது. அப்ப வானத்தின் வடிவம் என்ன ?
5. இலவச டிவி ,இலவச மின்சாரம் . சீரியல் பார்த்து அழ இலவச கர்ச்சீப்பும் கொடுப்பார்களா ?
6. ஏன் தமிழ்நாடு தவிர வேறு எந்த தென்னக மாநிலத்திலும், திராவிட என்ற பெயரில் எந்த கட்சியும் இல்லை ?
7. "இரஜினி ரசிகனுக்கு மூளை இருக்கா, தமிழனுக்கு மூளை இருக்கா" என்பது இருக்கட்டும், முதலில் வட்டத்துக்கு மூலை இருக்கா ?
8. இலவச கொத்தனார் தன் வீட்டையும் இலவசமாகவே கட்டிப்பாரா ?
9.ரேஸ் கார் டிரைவர்கள் எல்லாம் ரேஸிஸ்டா ?
10. ஏன் எல்லா பட்டியல்களும் பத்தோட முடிந்து விடுகிறது ?
அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதில் அளிப்பவர் இந்த வார ஸ்டார் பதிவராக சின்னவன் குழுவினரால் அறிவிக்கப்படுவார் !!!
Thursday, August 31, 2006
வேட்டை(விளை)யாடு
தனித் தமிழில் எப்போதும் கதைப்பதாகவும், கவிதை எழுதிக் கொல்லும் அந்த நடிகர் தன் வடமொழிப் பெயரான கமலஸாஸன் என்பதை இவ்வளவு நாள் வரையிலும் தாமரைசிரிப்பாளன் என்று மாற்றிக் கொள்ளாதிலேயே அவரின் ஆரியப் பற்று அப்பட்டமாகிறது.
$10 டிக்கெட்டுக்கும், $20 நொறுக்கித் தீனிக்கும் செலவழிக்காமல், நியாயமாய் இணையத்தில் இந்த படத்தை பார்த்தில் எழுந்த சில கேள்விகள்.
1. அடுத்த கெளதம் படத்தில் ஜோதிகா எப்படிக் கொல்லப்படுவார் ?
2. கெளதம் பட வில்லன்கள் அனைவரும் ஒரே சலூனில்தான் முடி வெட்டிக் கொள்கிறார்களா ?
3. அமெரிக்காப் போகும் போது Econamy class பயணம் செய்யும் கமல், ஜோதிகாவுடன் திரும்ப வரும் போது , ஏன் First Class வருகிறார் ?
4.அருண் வேலை செய்வது சியாட்டலில் , கமல் உபயோகிக்கும் லாப்டாப், Mac , அப்ப கெளதம் Anti-Microsoft ?
5. கமல் ஜோடி கமலினி, அப்படியென்றால் ரஜினியின் அடுத்த ஜோடி ரஜினியினி ?
6. கை, மார்பு என்று குத்தாமல், முதுகில் இளமாறன் , பச்சைக் குத்தியிருப்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கிறதா ?
7. Seriously, shit இந்த இரண்டு வார்த்தைகளில் எந்த வார்த்தை இந்தப் படத்தில் அதிகம் பயன்படுத்தப் பட்டு இருக்கிறது ?
8. மனைவியைக் கொல்லும் வில்லனை, போலிஸ்கார கதாநாயகன் இதுவரை எத்துனைப் படத்தில் பழிவாங்கி இருப்பான்?
பினா குனா 1:
முதல் பத்தி , விரைவில் வலைப்பூவில் இந்தப் படத்தை பற்றி எழுதப் படப் போகும் விமர்சனம் என்று, துப்பறியும் பாம்பு குழுவினரின் ஆறாவது உறுப்பினர் , சிலுக்குவார்ப் பட்டி சின்னக் கிழவனார், எமக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
பினா குனா 2:
இந்தப் பதிவுக்கு மட்டும் கலர் பென்சில் இலவசமாய் அளித்த குசும்பனாருக்கு நன்றிகள்.
Wednesday, April 05, 2006
கவிதை, Jessica Alba, Playboy
வரதட்சணை கொடுத்து
மாப்பிள்ளை வாங்கினேன்.
மண் எண்ணெய் அடுப்பு
இலவசமாய் கொடுத்தார்
மாமியார்.
----------------------------------------
வெண்பா வடிக்க அன்பா(ய்)
அழைக்கும் மேஸ்திரி !
வம்பா(ய்) நிமிரா நாய் வாலுக்கு
போடலாமோ இஸ்திரி ...
====================================================================================
ஜெஸிக்கா இரசிகர்களால் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கு கோர்ட்டுக்குப் போகாமலேயே முடிந்து விட்டது.

மேலதிக விவரங்களுக்கு
Monday, April 03, 2006
7-27-2007
உங்கள் அபிமான திரை அரங்குகளில் ...
பார்க்கத் தவறாதீர்கள், பார்த்தும் மறந்து விடாதீர்கள்.
அகில உலக தமிழ் வலைப்பூக்களில் முதன்முறையாக...
முன்னோட்டம்..
(click on the image for the video ! )
இந்த வார கலெக்ஷ்னில Ice age, Stone Age ஜெயித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ??
Tuesday, March 28, 2006
காதல் !!!

காதல் ஒரு வழி
பாதை பயணமாம்
பாவம் நான்
என் கார் இருப்பதோ
மெக்கானிக் கடையில்.
பிரேக் மாற்ற ஆயிரம் ரூபாயாம்
ஹர்ரன் ஒலி அதிகரிக்க
பத்து ரூபாய்தான் ஆனது .
என்னவளே !!
நீ சொர்கத்தில் பிறந்தவளாய்
இருக்கலாம் ! ஆனால்
நிச்சயம் நரகத்தில்தான்
வளர்க்கப்பட்டு இருக்கிறாய்
ஏனடி !
என்னை வதைக்கிறாய்.
நான் மீண்டும்
சிறுவனாக ஆகக் கூடாதா ??
சிறுவயதில் உடைந்த எலும்புகள்
சீக்கிரம் ஆறிவிட்டன.
உன்னால் இன்று உடைந்த
இதயம் எப்போது ஆறும் ??
Saturday, March 25, 2006
தேர்தல் ஜூரம்
தோற்றம்:
பமக வின் நிறுவனர், தலைவர், இளைஞர், வலைபூ கலைஞர் முகமூடியார். இக்கட்சி தன் சொந்த நலனுக்காக ஆரம்பிக்க ப்பட்டது என்றாலும், மிக விரைவிலேயே, உலகத் தமிழர்களின் மத்தியில் பரந்த வரவேற்பை பெற்றது. வளைகுடா நாடுகள் முதல், இரஷ்யா வரையிலும், அமெரிக்க நாடுகள் முதல் நியூஸி வரையிலும் இக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருப்பது, வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்கு அரிய ஒரு எடுத்துக்காட்டு.
இது ஒரு சாதிக் கட்சி என்று அடிக்கடி எதிர்கட்சிகள் ஏளனம் செய்துக் கொண்டுத்தான் வருகிறார்கள். சொல்லை விடச் செயல் பெரிது என்று கட்சியும் அதன் தொண்டர்களும் அதற்கெல்லாம் செவிக் கொடுக்காமல் பணிச் அயராமல் செய்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவ்வப்போது கட்சிப் பிளவு,பொது, இணை, துணை செயலாளரின் ஆவேச அறிவிப்புகள் இருந்தாலும், கட்சியை பிளவுப்படாமல் வைத்து வழி நடாத்திவருகிறார் முகமூடியார். இன்று இருக்கும் கட்சிகளில் உட்கட்சிப் பூசல் அதிகம் (வெளிவராமல் இருக்கும் ) இல்லாத கட்சி பமக என்றால் அது மிகையாகாது.
பமக வின் தேர்தல் கூட்டணிப் பற்றி அதன் அகில உலக இணைத் துணைப் பொது செயலாளர் அளித்த அறிக்கையை நாம் கொஞ்சம் கவனித்து வாசிக்க வேண்டும். இது ஒருப் புதிய கட்சியாக இருந்தாலும், தங்களின் அரசியல் அறிவையும், சாதுரியத்தையும், தங்களின் அறிக்கைகளும், பதிவுகளும். மூலமாக தெளிவாக விளக்கி வருகிறார்கள் . அது இரசிக்கும் வண்ணமுமாக வெளிப்படுத்துவதின் மூலம் மக்களை எளிதில் சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.
இது ஒரு வெற்றுப் பேப்பர் கட்சி என்று சொன்னவர்களுக்கு, மூன்று வார்த்தைகளுக்கு 350க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்கள் வரவைத்து தங்களின் பலத்தையும் காட்டி இருக்கிறார்கள் .
பமக தலைவர் Indiblog தேர்தலில் அறுதிப் பெரும்பாண்மையுடன் வென்றதும் நினைவில் கொள்ள வேண்டும் இந்த தருணத்தில்.
பமக, பச்சோந்தி மக்கள் கட்சியா, பலம் வாய்ந்த மக்கள் காட்சியா
Wednesday, March 22, 2006
கல் எறிந்தவர்கள் - Uno
என்று சுயசரிதை எழுதுகிறார் ஒருவர் !
இந்த குளத்தில் காதல் எறிந்தவர்கள்
என்று கவிதை எழுதுகிறார் மற்றவர்
என் மீதே கல் எறிந்தவர்களை
பற்றி நான்
என்ன எழுத ?
என் கவிதைகளைப் படிப்பதுதான்
அவர்களுக்கும் தண்டனை ?
*******************************************************************
கொழுந்து விட்டு
எரியும் விளக்கின்
அருகில் வந்த விட்டில் பூச்சி
சொன்னது ...
என் மரணத்துக்கு
யாரும் காரணம் இல்லை !
*******************************************************************
எருதுக்கு தெரியுமா
காக்கையின் கால் வலி ??
------------------
பெளர்ணமி பாண்டியன்
Snakes on a plane- ஒரு முன்னோட்டம்
இந்த "திகில்" படத்தின் முன்னோட்டத்தை பார்த்து அசந்துத்தான் போய் விட்டேன்.
வெறும் விமானத்தை வைத்து பயம காட்டியாகி விட்டது, பாம்பை மட்டும் அனகோன்டா அது இட்து என்று பயம் காண்பித்தாகி விட்டது. இரண்டையும் சேர்த்து பயம் காட்ட வேண்டும் என்று யோசித்த கதாசிரியருக்கும். அதை படமாக்க முன்வந்த New line Cinema ஸ்டியோக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதில் நடிக்கும் Samuel Jackson க்கு பாம்பை விட நிறைய பணம் கொடுத்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று ஊகிக்க முடிகிறதா ?
1. விமானத்தில் பாம்புகள் இருக்கின்றன
2. Samuel Jackson விமானத்தில் இருக்கிறார்
3. Samuel Jackson பாம்புகளை அடித்து நொறுக்குகிறார்.
4.சுபம்.
படம் அபாராமாக ஓடி அடுத்த வருட ஆஸ்கர்களை அள்ளி குவிக்கும்
என்பதில் சந்தேகம் இல்லை
ஆமா, இவங்க ஏதாவது நம்ம இராமநாராயணன் படத்தை பார்த்து காப்பி அடித்து இருப்பார்களோ ?
trailer இங்கே !!!!
